குடல் ஆரோக்கியத்துக்கும் கூந்தல் உதிர்வுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? முழுமையான விளக்கம்
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தின் அடித்தளமாக என்று கருதப்படும் குடல் ஆரோக்கியம், உணவு செரிமானத்தில் மட்டுமல்லாமல் உடலின் ஒவ்வொரு உறுப்பு அமைப்புகளின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது நமது வெளித்தோற்றத்தில் ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.அதாவது சருமம் மற்றும் தலைமுடியில் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
முகப்பரு, எக்சிமா, ரோசாசியா, வறட்சி, பொடுகு மற்றும் முடி மெலிந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படுவது குடல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளாக பார்க்ப்படுகின்றது.
அந்த வகையில் எவ்வாறான குடல் பாதிப்புகள் இவ்வாறாக அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனபது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
குடல் பாதிப்பின் அறிகுறிகள்
குடலில் சமநிலை சீராக பராமரிக்கப்படாத பட்சத்தில் வீக்கம், அழற்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு, அது நேரடியாக நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குடலுக்கு போதியளவு நார்ச்சத்து மற்றும் நீறேற்றம் கிடைக்காத பட்சத்தில் சருமம் பொலிவிழந்து காணப்படுதுடன் கூந்தல் வறட்சியடைந்து உதிர ஆரம்பிக்கும். குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் சருமம் தெளிவாகவும் கூந்தல் நீரேற்றத்துடன் பளபளப்பாக இருக்கும்.
குடலில் உள்ள நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலையின்மை காரணமாகவே முகப்பரு, எக்ஸிமா மற்றும் தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
குடல் ஆரோக்கியமாக இல்லாத போது ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாத நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக சருமம் மற்றும் தலைமுடி பாரயளவில் பாதிக்கப்படுகின்றது.
ப்ரோபயோடிக் மற்றும் ப்ரீபயாடிக் நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
தயிர் மற்றும் கேபீர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளிலும் பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்ற ப்ரீபயாடிக் உணவுகளிலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.
இவ்வாறான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடலின் தினசரி தண்ணீர் தேவையை சரிவர பூர்த்தி செய்வதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |