யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்...இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும்.
இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.
பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது. இருப்பினும், ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.
இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. பின் இவற்றின் காரணமாக மூட்டுவலி, வீக்கம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கசிதல், முதுகில் வலி, எழுந்து உட்காருவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
யூரிக் அமில அளவை உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மற்றும் அதன் நுகர்வு யூரிக் அமில பிரச்சனைக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. அதிக யூரிக் அமிலத்தை குறைக்க, உங்கள் உணவில் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அதை பல வழிகளில் உட்கொள்ளலாம். விரைவான பலன்களைப் பெற, நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது நன்மை பயக்கும். இது தவிர, நெல்லிக்காய் சட்னி அல்லது அதன் நேரடி நுகர்வு உடலுக்கு நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |