முகத்துல பூனை முடி ரொம்ப அசிங்கமா இருக்கா? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!
பொதுவாக பெண்களுக்கு கழுத்து மற்றும் முகத்தில் கீழ் பகுதி ஆகிய இடங்களில் சிறிய சிறிய முடி வளரும்.
இது எல்லா பெண்களுக்கும் இருக்காது. மாறாக ஹார்மோன்களின் மாற்றங்கள் அடிப்படையில் தான் இந்த முடி வளருகின்றது.
அத்துடன் பெண்கள் முகத்தில் முடியுடன் இருக்கும் பொழுது அவர்கள் முகத்திற்கு என்ன செய்தாலும் அது அந்த முடியுடன் ஒட்டிக் கொள்ளும். அது மட்டுமன்றி சில பெண்களுக்கு ஆண்களை போல் தோற்றத்தை கொடுக்கும்.
இது போன்ற முடிகளை வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு சைனிங் செய்யலாம். அது எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை
எலுமிச்சை சாறு
செய்முறை
ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலந்து கொள்ளவும். பின்னர் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சமாக கலவையை சூடாக்க வேண்டும்.
ஆற விட்டு ஆறியதும் அந்த கலவையை முடியுள்ள இடங்களுக்கு அப்ளை செய்யவும். பின்னர் சரியாக 15 -20 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்து விட்டு வட்டமான முறையில் முகத்தை மசாஜ் செய்யவும்.
இறுதியாக கெட்டியாக இருக்கும் சர்க்கரை கலவையை எடுத்து முகத்தில் தடவி முடி இருக்கும் திசை அல்லாதல் அதற்கு எதிர்த்திசையில் பிடித்து இழுக்க வேண்டும்.
இந்த முறையை சரியாக செய்தால் அழகுக்கலை நிறுவனங்களுக்கு செல்லாம் இயற்கையாகவே பூனை முடிகளை மாதம் மாதம் அகற்றலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |