தேநீரில் ஏலக்காய் போட்டு குடித்தால் இவ்வளவு ஆபத்தா? டீ பிரியர்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக இந்தியர்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தற்போது டீ என்பது ஒரு பானமாக இருப்பதை தாண்டி ஒரு ஈர்ப்பாக மாறி விட்டர்.
டீ குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் அதனை குடிப்பதால் ஒரு சில பக்க விளைவுகளும் இருப்பதை நாம் அறிந்திருப்போம்.
அதிலும் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயற்றில் அமிலத்தன்மை ஏற்படுகின்றது.
சிலர் தேநீருடன் ஏலக்காய் சேர்த்து குடிப்பார்கள். இப்படி டீ குடிப்பதால் அமிலத்தன்மை குறைக்கிறது என்பது ஒரு நம்பிக்கையாகவுள்ளது.
அந்த வகையில் டீயில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் வயிற்றில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
டீயில் ஏலக்காய் கலப்பதன் காரணம்
தேநீரின் சுவைக்காக மாத்திரமே மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் தேநீரின் pH அளவில் எந்தவிதமான மாற்றம் ஏற்படாது.
டீயில் ஏலக்காய் சேர்க்கும் அமிலத்தன்மையை பாதிக்க போதுமானதாக இல்லை. எனவே, டீயில் என்ன மசாலாப் பொருள் கலந்தாலும் pH அளவில் கணிசமாகக் கூட மாற்றம் ஏற்படாது.
அமிலத்தன்மையை குறைக்கும் பொருட்கள்
1. சோம்பு விதைகள் செரிமானத்தை சீர்ப்படுத்தும் வேலையை செய்கிறது. அமிலத்தன்மை அதிகரிக்கும் பொழுது செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாப்பிட்ட பிறகு, சிறிது சோம்பு விதைகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்கலாம். அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீர் குடிக்கலாம்.
2. கொத்தமல்லி இலைகள் அல்லது மல்லி விதைகள் இரண்டுமே அமிலத்தன்மை குறைக்க உதவும் முக்கிய பொருட்களாக பார்க்கப்படுகின்றது. பச்சை கொத்தமல்லி சாறு அல்லது கொத்தமல்லி விதையை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினைகள் வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |