அதிர வைக்கும் உண்மைகளோடு மறைந்த விமானம் ! மறைந்தாலும் தோண்டப்படும் மர்மங்கள்
2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பீஜிங்கை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
போயீங் 777-200ER ரகத்தைச் சேர்ந்த விமானமான இந்த விமானம் கிளம்பிய 38வது நிமிடத்தில் தெற்கு சீன கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஏடிசி ராடாரில் இருந்து விமானம் காணாமல் போனது .
ஏடிசி ராடார் என்பது விமானங்கள் தற்போது எந்த பகுதியில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை கணிக்கும் கருவியாகும் .
இந்த விமானம் காணாமல்போனதும் மலேசிய அரசு விமானத்தைக் கண்டுபிடிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டது. அதன் படி ராணுவ விமானப்படையினர் விமானம் காணாமல் போன ஒரு மணி நேரத்தில் விமானத்தின் தகவல்களைக் கொண்டு அவர்களது ரேடாரில் விமானம் எங்குச் செல்கிறது என்பதைக் கண்காணித்தனர்.
அந்த விமானம் வழக்கமான பாதையிலிருந்து மாறி வேறு வழியாகச் சென்றது. விமானம் பாதை மாறியது குறித்த தகவல் அரசிற்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமானப்பணியாளர்கள் பயணித்துள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது? நடுவானில் எப்படி விமானம் மாயமானது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.