டாக்டர் ஷர்மிகா அறிவுரை: வாழ்கையின் இவற்றை செய்தால் 60 இலும் 20 போல செயற்படலாம்
அனைத்து மனிதர்களும் வாழ்க்கையில் இந்த விடயங்களை 60 வயதிலும் எழுந்து நடக்கும் தென்பு இருக்கும்.
டாக்டர் ஷர்மிகா
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலர் அவர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் கனவுகளை நோக்கி விரைவாக பயணிக்கின்றனர்.
ஆனால் இது எவ்வளவு நமக்கு முக்கியமாக இருந்தாலும் நமது ஆரோக்கியம் கெட்டுப்போனால் எதையும் நம்மால் சாதிக்க முடியாது.
காரணம் நம்முடைய அன்றாட பணிகளை திறம்பட செய்வதில் இருந்து நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது வரை, நம்முடைய ஆரோக்கியத்தை சார்ந்தே இருக்கிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில 5 விஷயங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் நம்முடைய நம்முடைய ஆரோக்கியம் மேம்பட்டு இலக்கை தடையின்றி அடைய முடியும் என மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
முதலாவது வாழ்கையில் மிகவும் முக்கியமானது தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். குறிப்பாக, நம் தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும் என்று அவர் குறப்பிடுகிறார்.
இதற்காக வீட்டிலேயே சாதாரணமாக டம்பெல் போன்ற பொருட்களை கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். மேலும், புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.
வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதற்கு தினமும் முட்டை, பருப்பு போன்ற எளிமையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் புரதத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அடுத்தது முடிந்தவரை தினசரி காலையில் சீக்கிரம் எழுந்து பழக வேண்டும். இவ்வாறு செய்யும் போது அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், நமக்கு நிறைய நேரமும் இருக்கும்.
இந்த நேரத்தை பயன்படுத்தி நமக்கான விஷயங்களை எளிதாக செய்ய முடியும். தற்போது இப்படி பழக்கத்தில் இல்லாதவர்களுக்கு இது கடினமாக இருந்தாலும் பழக பழக இது எளிதாக இருக்கும்.
தற்போது, பலரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் வகையிலான பணிகளில் இருக்கின்றனர். இவர்கள் குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.இறுதியாக, நம்முடைய வெளிப்புற தோற்றத்தையும் நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.
இதற்காக விலை உயர்ந்த ஆடைகள் அணிவது, மேக்கப் போடுவது என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை. இவ்வாறான இயற்கையின் எளிய விடயங்களை செய்தால் போதும்.
எனவே இந்த 5 விஷயங்களை தினசரி பின்பற்றுவதன் மூலம் நம் ஆரோக்கியம் மேம்படுவதுடன், நம்முடைய வாழ்க்கை தரமும் உயரும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |