குளிர்காலத்தில் உடலை தாக்கும் முக்கிய 5 பிரச்சினைகள்- மருத்துவரின் தீர்வு
பொதுவாக காலங்கள் மாறும் பொழுது அதன் தாக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
அப்படியாயின் கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்கும் பொழுது மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதும். ஏனெனில் இந்த பருவகாலத்தின் போது குளிர்ச்சி அதிகமாக இருக்கும். இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக காய்ச்சல், தலைவலி, வயிற்றுகோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
குளிர்காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு தூய்மையான பராமரிப்பு, தேவையான அளவு நீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவு பழக்கம், உடல் முழுவதையும் மூடும் வகையில் ஆடை அணிதல் ஆகிய நடைமுறைகள் உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
குளிர்காலங்களில் நோய் வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரமாக குணமாக்க முடியாது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
இது தொடர்பான சில குறிப்புகளை பிரபலமான மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் வலியுறுத்துகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலங்களில் மருத்துவர் கூறும் ஆலோசனை
1. குளிர்காலத்தில், சளி மற்றும் இருமல் உள்ளிட்ட சுவாசப்பாதை தொற்றுகள் பரவ வாய்ப்பு உள்ளது. இது போன்ற தொற்றுக்களின் பாதிப்பை குறைப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
2. நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கு சோப் மற்றும் நீரைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகமான தடவைகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வைரஸ் தொற்றுகள் பரவுவது குறைவாக இருக்கும்.
3. பொது இடங்களில் அதிகமான சன நெரிச்சலாக இருந்தால் அது போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனின் காற்றின் மூலமும் சில தொற்றுக்கள் பரவலாம். அது உங்களின் சுவாசப்பாதையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
4. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது அவசியம். இது நோய்கள் வராமல் எம்மை பாதுகாக்கும்.
5. கனமான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் சூட்டு ஆறிய நீரை பருகுவது நல்ல பழக்கமாக பார்க்கப்படுகின்றது. நோயெதிர்ப்பு சக்திகள் பருவ மழைகளின் போது குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |