மயானத்தில் மகனின் சடலத்தை வைத்து விட்டு பதறி ஓடிய மருத்துவர்.... இறுதியில் நெஞ்சை உறைய வைத்த கதை
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த ஒரு குட்டி கதை இது.
யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள்.
அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்து காட்டு இல்லை.
குட்டி கதை
ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஆபரேஷன் அறை செல்வதற்கான ஆடைகளை மாற்றி கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.
அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு எதுவும் நடந்தால் யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்.
வைத்தியர் - சிரித்த முகத்துடன் கூறினார், எனக்கு வைத்தியசாலையில் இருந்து அழைப்பு வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன். பொறுமையாக இருங்கள் உங்கள் மகன் இறக்கவில்லை.
நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா.. என்று மீண்டும் பிள்ளையின் தகப்பனார் கத்தியுள்ளார்.

வைத்தியர் புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் அறைக்குள் சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார்.
மேலதிக விடயங்களை தாதியரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்.
அவ்விடம் வந்த தாதியரிடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு வைத்தியர் ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார்.
உடனே தாதியர் சொன்னார்.... வைத்தியரின் மகன் நேற்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை அவருக்கு அறிவித்தோம். அதை விட்டுட்டு வைத்தியர் உடனே ஓடி வந்து ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார் என்றார்.
தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தவனாக மிகுந்த கவலையுடன் தன் மகனை பார்க்க சென்றார்.
எனவே யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள்.
அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும். படித்ததில் மனதை தொட்டது. மனிதன் வாசகர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பிடித்திருக்கும்.