இளம்பெண்ணின் காதுக்குள் உயிருடன் வாழ்ந்த சிலந்தி பூச்சி: மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி
சீனாவில் இளம்பெண்ணின் காதுக்குள் சிலந்தி பூச்சி ஒன்று உயிருடன் வாழ்ந்து வந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் Zhuzhou நகரை சேர்ந்த இளம்பெண் Yi, அவரது காதில் அசௌகரியமாக இருந்ததுடன் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
இதனால் மறுநாள் காலை மருத்துவரிடம் சென்றுள்ளார், அங்கே அவரது காதை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருடன் சிலந்தி பூச்சி இருப்பதை உணர்ந்துள்ளார்.
முதல் நாள் மாலையிலிருந்தே காதில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், ஒருநாள் இரவு முழுவதும் சிலந்தி உயிருடன் இருந்ததும் தெரியவந்தது.
ஏதாவது ஒரு கிருமித்தொற்றாக இருக்கும் என Yi எண்ணிய நிலையில், உயிருடன் பூச்சி இருந்தது அவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்ததாம்.
உடனடியாக சிகிச்சையின் மூலம் பூச்சி நீக்கப்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
