தினமும் கணினியில் வேலை செய்கிறீர்களா?.. கண் பிரச்சனையிலிருந்து தப்பிக்க இதோ டிப்ஸ்
கணினியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் பார்வை பிரச்சனை வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதவின் கூலம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் எல்லாம் தொழில்நுட்ப மயமாகிவிட்டதால், பலரது வேலை கணினியில் தான் இருக்கின்றது.
முன்பெல்லாம் உடம்பை வறுத்திக்கொண்டு வேலை செய்வதை விட்டுவிட்டு, தற்போது அமர்ந்த இடத்தில் கணினி முன்பு தனது வேலையை செய்து வருகின்றனர்.
நாம் விழித்திருக்கும் நேரத்தில் 90 சதவீதம் நமது கண்களுக்கு முன்பாக கணினி அல்லது தொலைபேசியுடன் தான் இருந்து வருகின்றோம்.
இவ்வாறு திரையை தொடர்ந்து அவதானித்து வந்தால் நமது கண்ணின் பார்வையின் நிலை என்னவாகும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது.
டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன் அறிகுறிகள்:
கண்கள் சோர்வாகும் உணர்வு
பார்வையின் தெளிவு குறைவு
வறண்ட கண்கள்
தலைவலி
கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
சிவந்த கண்கள்
என்ன செய்யலாம்?
உங்களது முழங்கையை நீட்டினால் இருக்கும் தூரத்தில் கணினியை வைத்து பாவிக்க வேண்டும். மிகவும் அருகில் வைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்கணில் பாதிப்பு வராமல் தடுக்கலாம். மேலும் கணினியின் எழுத்துக்களின் அளவை அதிகரித்து, தொலைவில் இருந்து வேலை செய்யலாம்.
கணினியின் இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும். குறைந்தது ஐந்து அங்குலங்கள் வேலை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். திரையை நீங்கள் பார்க்கும் போது கொஞ்சம் கீழே பார்த்து பார்க்கும்படியாக வைக்கவும்.
கண்கள் வறட்சி அடையாமல் இருப்பதற்கு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தூரத்திலிருக்கும் மரங்களின் கிளைகளை 20 நொடிகள் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கு இருபது முறையாவது கண்களை சிமிட்ட வேண்டும்.இதன் மூலம் கண்கள் ஈரப்பதத்தை இழக்காது.
மருத்துவரின் ஆலோசனை படி கணினியில் அமர்ந்து வேலை செய்வதற்கு கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்ளவும்.
நீங்கள் அமர்ந்திருக்கும் அறை நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். இருட்டான அறையில் வைத்து கணினி வேலையை செய்வதை தவிர்க்கவும். அதாவது திரையின் வெளிச்சத்தை விட உங்களது அறையின் வெளிச்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |