சிக்கன் சூப் இப்படி செய்து பாருங்க... வீட்டுல போட்டி போட்டு சாப்பிடுவாங்க
மழைக்காலம் வந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து குளிர் க்காலமும் வந்து விடும்.. இந்த பருவக்காலங்களில் சூடாக எதையாவது குடித்தால் தொண்டைக்கு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைப்போம்..
நான் அனைவரும் உடனே குடிப்பது டீ மற்றும் காபிதான்.. அதனையும் அடிக்கடி குடித்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஐசிஎம்ஆர் சமீபத்தில்தான் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனால் சளி பிடித்தவர்கள் தொண்டைக்கு இதமாக சூப் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் சூப் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் சுவை அலாதியாக இருக்கும்.. அவர்களும் அதை விரும்பி குடிப்பார்கள்..
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கோழிக்கறி (எலும்புடன்) - 1/2 கிலோ
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு, அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி வந்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் உப்பு போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்..
அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுமார் 5 -6 விசில் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 6 விசிலுக்கு பின் குக்கரை அடுப்பில் இருந்து விட்டு இறக்கி வைக்க வேண்டும்.. இதில் இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அருமையான சிக்கன் சூப் ரெடி..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |