வீடே மணமணக்கும் வாசனையுடன் காரசாரமான ரசப்பொடி செய்வது எப்படி? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தமிழர்களின் சைவ உணவில் ரசம் என்பது முக்கியமாக வைக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் நாம் பல வகையான ரசங்களை உண்டிருப்போம். அது மிகவும் சுவையாகவும் காரமாகவும் இருக்கும்.
நீங்கள் வீட்டில் மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், பால் ரசம் என பல வகையான ரசங்களை செய்திருப்பீர்கள்.
ரசம் வைத்து குடிப்பதால் ஜுரணம், சளி தொல்லை போன்றவற்றிக்கு நன்கு பயனளிக்கும் ஒரு உணவாகும்.
ஆனால் ரசம் செய்வது மிகவும் எளிதானதாக இருந்தாலும் அதை மேலும் சுலபமாக செய்வது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு – 1 கப்
- மல்லி – 1/2 கப்
- வரமிளகாய் – 10
- புளி – 100 கிராம்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 கப்
- மிளகு – 1/2 கப்
- பெருங்காயம் – பெரிய துண்டு ஒன்று
- கல் உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு வறுக்க கூடிய பாத்திரத்தை வைத்து அது சூடானதும் அதில் துவரம் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், பெருங்காயம், புளி மற்றும் கல் உப்பு ஆகியவற்றை பொன்நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் பெருங்காயத்தை பொடியாக்கி அதையும் வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் வறுத்து எடுத்த அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
இந்த கலவையில் புளி சேர்த்துள்ளதால் புளி சுலபமாக பொடி ஆகாது, எனவே மீண்டும் மீண்டும் சளித்து நன்றாக அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
பின்னர் இறுதியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து அந்த பொடியுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
கறிவேப்பிலையை சேர்க்கும் போது பொடியாக்கி சேர்க்கவும். இப்போது சுலபமாக ரசம் செய்ய ரசப்பொடி தயார்.
இதை நீங்கள் கண்ணாடி போத்தலில் காற்று உள்ளே நுழையாமல் ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்து பாவிக்கலாம்.