நீங்களும் உங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்கிறீர்களா? தவறை செய்யாதீங்க
குழந்தைகளிடம் பெற்றோர்கள் பொய் பேசினால், அது குழந்தையின் உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சியில் நீடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெற்றோர்களின் தவறு
பொதுவாக குழந்தைகளை வளர்ப்பது என்பது கடினமாக காரியமே... இவ்வாறு குடும்பத்தையே குதூகலமாக வைத்திருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எதாவது ஒரு நேரத்தில் பொய் பேசுவது உண்டு.
இந்த பொய்கள் உங்களது குழந்தையை பாதிக்காது என்று தான் நினைத்திருப்பீர்கள். ஆனால் இவை குழந்தையின் உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக குழந்தைகள் தங்களது பெற்றோர்களை அதிகமாக நம்புவதுடன், அறிவு மற்றும் வழிகாட்டும் நபர்களாக இருக்கின்றனர்.
இளம் வயதில் குழந்தைகளின் நம்பிக்கையின் அடித்தளத்தினை நிறுவ அதிக மதிப்பு கொடுக்க வேண்டும். தொடர்ந்து பொய் சொல்வது இந்த அடித்தளத்தை அசைத்து, குழந்தைகள் வயதாகும்போது தகவல்தொடர்பு சிக்கல்கள் மற்றும் உறவுகளை சீர்குலைக்கும்.
பெற்றோர்கள் கூறும் பொய்
தற்போது சிறிய பொய்கள் பெரியதாக தெரியவில்லை என்றாலும், குழந்தை உலகத்தை பார்க்கும் விதத்தில் அவை பெரிதாகவே காணப்படும். குழந்தைகளுக்கு சந்தேகம் மற்றும் குழந்ப்பத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் உணர்ச்சி நல்வாழ்வு தாங்கள் குடும்பத்தில் சந்திக்கும் பொய்களால் பாதிக்கப்படுவதுடன், மன அழுத்தம் அதிகரித்தல், பதட்டம் மற்றும் துரோகம் போன்ற உணர்விற்கு வழிவகுக்கின்றது.
கடினமான தலைப்புகளில் வயதுக்கு ஏற்ற நேர்மையுடன் உரையாடுவது, குழந்தைகள் உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்கவும், வாழ்க்கையின் சவால்களை கையாள்வதற்கு அவசியமான சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்கவும் உதவும்.
வெளிப்படையான பேச்சு குழந்தைகள் நெறிமுறை நடத்தையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |