Normal Delivery-ஆக டயட் இருக்கணுமா? மருத்துவர் கூறும் விளக்கம்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் சமூக வலைத்தளங்களில் வரும் ஒரு சில ஆலோசனைகளை மனதில் வைத்து கொண்டு அதே போல் அவர்களும் முயற்சிப்பார்கள்.
இதனால் தாய்மார்களின் உடலுக்கு பக்க விளைவுகள் அதிகமாக வரலாம் என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
“ உடலமைப்பு என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆகையால் ஒருவர் கூறிய போல் இன்னொருவருக்கும் ஏற்படும் என்பது அவ்வளவு சாத்தியமாக இருக்காது. மாறாக குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக முன்னரே உடல்நிலையில் பெண்கள் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.
மூடநம்பிக்கைகளையும் அடுத்து கூறும் அறிவுரைகளையும் கேட்டு செயற்படாமல் உரிய மருத்துவரை நாடி உடல்நிலைக்கேற்ப ஆலோசனை எடுத்து கொள்வது சிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர் அவர்களை புகைப்படங்கள் எடுப்பதற்காக உடலை ஒவ்வொரு வடிவத்திற்கு திருப்பி திருப்பி வைப்பார்கள். மற்றும் தொடர்ந்து பால் கொடுக்காமல் படப்பிடிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
இது போன்ற செயல்களை முற்றிலும் குறைக்க வேண்டும். இது குழந்தைகளின் உடலில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்..” இப்படி குழந்தை பெறுவதற்கு தயாராகும் பெண்கள் முதல் குழந்தை பெற்று தாயான பெண்கள் வரை அவர்களுக்கு என்னென்ன தேவையோ? அந்த விடயங்களை அழகாக விளக்கியிருக்கிறார்.
அந்த வகையில் பிரசவம் குறித்து வேறு என்னென்ன ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.