பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவ்யா விலகல்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நடிகை காவ்யா அறிவுமணி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இத்தொடரில் மற்ற ஜோடிகளை காட்டிலும், கதிர்- முல்லை காட்சிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா, மரணமடைந்ததை தொடர்ந்து காவ்யா அறிவுமணி நடித்து வந்தார்.
இந்நிலையில் படவாய்ப்புகள் குவிந்து வருவதால், காவ்யா தொடரை விட்டு விலகப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கவின் நடிக்கும் ஊர்குருவி படத்தில் கவினுக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடிக்கவுள்ளதாகவும், அதனால் சீரியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.