உடம்பில் பல்லி எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்? பொதுவாக பலன்கள் இதோ
பல்லி உடம்பில் விழுந்தால் அசுபமாக நம்பப்படும் நிலையில், அதற்கான அர்த்தம் மற்றும் உண்மையான பலனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல்லி
பெரும்பாலான வீடுகளில் மூலைகளில் அசால்ட்டாக உலாவரும் பல்லியை, பார்த்தாலே பலரும் அரண்டு ஓடிவிடுவார்கள்.
ஏனெனில் இதனை பார்த்தால் அருவருப்பாக இருப்பதாலும், திடீரென நமது மீது விழுந்துவிடும் என்பதால் தான். ஆனால் பல்லி ஒரு நபர் மீது விழுவதால், அது அசுபமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் அது விழுந்த உடனே குளிக்க வேண்டும். இதனால் அதன் தீமைகளும் குறையும். மறுபுறம், பல்லி நம் மேல் விழுந்தால் அது எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது.
சாஸ்திரங்கள் படி, உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்லி விழுந்தால் ஏற்படும் பல்வேறு அசுப மற்றும் சுப பலனை தெரிந்து கொள்வோம்.
பல்லி விழும் பொதுவாக பலன்கள்
ஒருவரின் இடது கையில் பல்லி விழுந்தால் மன உளைச்சலையும், இடது கை விரல்களை உரசி சென்றால் மன கவலையையும் ஏற்படுத்தும்.
ஏழையாக இருக்கும் நபரின் தலையில் பல்லி விழுந்தால் அவர் ஆடம்பரமாக வாழப்போகின்றார் என்றும், பணக்காரர் தலையில் இருந்தால் செல்வத்தை இழக்க போகின்றார் என்று அர்த்தம்.
இதே போன்று நோயில் படுத்திருக்கும் பணக்கார நபர் மீது பல்லி விழுந்தால் மரணம் நிழப்போவதாகவும், அதுவே ஏழை நோயாளியின் மீது பல்லி விழுந்தால் அவரது நிலையில் தலைகீழாக மாறும் என்று கூறப்படுகின்றது.
ஒருவரது வலது காதில் பல்லி விழுந்தால், நீண்ட ஆயுள் அதிகரிக்கும் என்றும் அதுவே இடது காதில் விழுந்தால் ஆதாயம் மேம்படும் என்று கூறப்படுகின்றது.
உதட்டின் மேல் பல்லி விழுந்தால் செல்வம் அழிந்து போகும், அதுவே உதட்டின் கீழ் விழுந்தால் பணக்கார வாழ்க்கை வாழப்போகின்றார் என்று அர்த்தம்.
தொடை மீது பல்லி விழுந்தால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், தனது எதிரிகளையும் கீழே வீழ்த்துபவராக இருப்பாராம்.
இரண்டு முளங்கால்களுக்கு இடையே பல்லி விழுந்தால், வாகனம் வாய்ப்பு உள்ளதாகவும், கணுக்கால் மற்றும் பாதங்களுக்கு கிடையே பல்லி விழுந்தால், வாழ்க்கை துணையுடன் இருக்கும் உறவு அழியும் என்று கூறப்படுகின்றது.
இதயம் இருக்கும் பகுதியின் மேல் பல்லி விழுந்தால் மரண துன்பம் அனுபவிப்பார்கள் என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |