நம்ம தலையில் எப்படி பேன் வருதுன்னு தெரியுமா? வியக்க வைக்கும் உண்மைகள்!
பொதுவாகவே அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பேன் தொல்லையை அனுபவித்திருக்க கூடும்.
பேன்கள் எவ்வாறு நமது தலைக்கு வருகின்றது? அது எதை சாப்பிட்டு வாழ்கின்றது...என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? இந்த குழப்பங்களுக்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எப்படி பரவுககிறது?
பொதுவாக பேன்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு என்படி பரவுகளின்றது என்றால், பேன் இருப்பவர்கள் பயன்படுத்திய சீப்பு, பிரஷ், டவல் போன்றவற்றை பயன்படுத்தினால் பேன்களின் முட்டைகள் இன்னொருவருக்கு கடத்தப்படுவதால் பரவக்கூடும்.
அல்லது இரவு நேரத்தில் அவர்கள் அருகில் படுத்திருந்தாலும் இவர்களுக்கும் பேன் தொற்று உண்டாகும். பேன்கள் இருப்பவர்களின் தலையணையை பயன்படுத்தினாலும் இன்னொருவருக்கு பேன் தொற்று ஏற்படலாம்.

கண்ணுக்கு எளிதில் தெரியாத அளவிலிருந்து 4 மி.மீ வரை வளரும் பேன்களில் பெரிதாக இருப்பது பெண் பேன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடலில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து அதனை உணவாக உட்கொண்டே உயிர் வாழ்க்கின்றன.
6 கால்களை கொண்ட ஒட்டுண்ணி பூச்சியாக அறியப்படும் பேன்கள் கூந்தலை இறுக்கமாக பற்றிக்கொண்டு உயிர்வாழ்க்கின்றன. இவற்றால் ஒரு நிமிடத்துக்கு வெறும் 30 செ.மீற்றர் தூரம் வரை தான் நகர முடியும்.

இவை கூந்தலை இறுக்கமாக பற்றிக்கொள்வதால் தான் தலையை சீவினாலும் எளிதில் கீழே விடுவது கிடையாது. ஒரு பேனின் ஆயுள்காலம் சராசரியாக 30 நாட்களே ஆனாலும், அதற்குள் இது 1000 தொடக்கம் 2000 வரையிலான முட்டைகளை இடுமாம்.
ஒரு பசைபோன்ற திரவத்தை சுரந்து அதில் தான் பேன்கள் முட்டையிடும் அதனால் அவற்றை கூந்தலில் இருந்த சீவி அகற்றுவது மிகவும் கடினம்.பேனின் முட்டையை தான் நாம் ஈறு என்று குறிப்பிடுகின்றோம்.

எப்படி தலைக்கு வருகின்றது?
இது எங்கிருந்தும் தலைக்குள் வந்து புகுந்துக்கொள்ளவில்லை. மனிதர்களின் தலையில் சுமார் 60 லட்சம் வருடங்களுக்கு முன்பு இருந்தே வாழ்ந்து வருகின்றதாம். குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த காலம் தொட்டே பேன்கள் தலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |