காகம் ஏற்படுத்தும் சகுனங்கள்... ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்குமாம்
காகம் சில செயலால் நமக்கு கொடுக்கும் அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காகம் ஏற்படுத்தும் சகுனம்
மனிதர் தனது அன்றாட வாழ்க்கையில் காணும் பறவையாக இருக்கும் காகம், நம் முன்னோர்களின் அம்சமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆகவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்திற்கு அன்னம் இடுவதை இன்றும் பலர் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் காகம் கரைந்தால் விருந்தினர் வரப்போவதாக கிராமப் புறங்களில் இன்றும் கூறுவார்கள்.
காக்கை பாடினியார் என்ற சங்க காலப் புலவர் காகம் ஏற்படுத்தும் சகுனத்தை கூறியுள்ளார். நாம் பயணிக்கும் போது காகம் வலமிருந்து இடமாக சென்றால் லாபத்தையும், இடமிருந்து வலதுபுறத்திற்கு சென்ற நஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகின்றது.
பயணிக்கும் நபரை நோக்கி காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், பயணத்தை தவிர்க்கவும். காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டுவதை கண்டால் பயணம் இனிதாகுமாம்.
ஒருவர் பயணிக்கும் போது அவரது குடை, வாகனம், உடல், அவரது நிழல் என இவற்றில் காகம் தன் சிறகால் தீண்டினால் பயணிப்பவருக்கு அகால மரணம் நேரிடலாம் என்று கூறப்படுகின்றது.
பூஜை செய்யும் போது காகம் பூக்களை கொண்டு மேலே தூவினால் குறித்த பயணத்தில் தன லாபம் ஏற்படும்.
வாகனம், குடை, காலணி இவற்றின் மீது எச்சம் இட்டால் உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால் தனலாபம், மற்றும் பெண்களால் நன்மை உண்டாகும்.
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பினால் பஞ்சம் வரப்போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றி காகம் பறந்தால் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.
ஒருவரின் மேலே படும் காகம் அவருக்கு உடல் உபாதை ஏற்படுவதை குறிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |