மணமகனின் வலது பக்கம் மணமகள் அமர்வது ஏன்? பலரும் அறியாத ஜோதிட காரணம்
திருமணத்தின் போது மணமகனின் வலதுபக்கத்தில் மணமகளை ஏன் அமர வைக்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வலது பக்கத்தில் மணமகள்
இந்து மதத்தின் படி திருமணத்தில் பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது.
மேலும் இந்து மதத்தில் உள்ள மரபுகள், திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிப்பதாக நம்பப்படுகின்றது.

இந்து வேதத்தில் மனைவி வாமாங்கினி என்று அழைக்கப்படுகின்றது. மேலும் கணவரின் வலது பக்கத்தில், மணமகளின் இடது பக்கம் என்பதால் இதயத்திற்கு அருகே இருப்பதாக ஒரு உணர்வு காணப்படும் நிலையில், இதனால் தான் மணமகனின் வலதுபுறத்தில் அமர வைக்கின்றனர்.

மணமகளின் இதயத்திற்கு அருகில் மணமகன் இருப்பதால் அதிக நெருக்கமாகவும், எப்பொழுதும் அன்பில் நிலைத்திருப்பார்கள் என்பதையும் குறிக்கின்றது.
ஆனால் சாஸ்திரங்களின் படி லட்சுமி தேவி விஷ்ணுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் அர்த்தநாரீஸ்வரரிலும் இந்த வடிவத்தை நாம் காணமுடிவதுடன், சிவனும், பார்வதியும் ஒரே உடலில் இரண்டு பகுதிகளாகத் தோன்றுவதையும் குறிக்கின்றது.

பண்டிதர்களின் கூற்றின்படி, கணவரின் வீட்டிற்குள் நுழைந்த மணமகள் அவரது வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்ல அதிர்ஷ்டமாகவும், நிதி ஆதாயத்திற்கான நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |