சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் நிறைய கட்டுபாடுகள் இருக்கின்றன.
அந்தவகையில் இந்தியாவில் பிறந்து விட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டால் அதற்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன.
இந்தியாவிலிருந்து ஒருமுறை சிங்கப்பூர் சென்று விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே செல்ல வேண்டும் என்றால் என்ன மாதிரியான வரம்புகளை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சிங்கப்பூர் செல்ல வேண்டும் சில நிர்ணயம் உள்ளது என அந்நாட்டு மனிதவள அமைச்சகம் சில விதிமுறைகளை வைத்துள்ளது.
சிங்கப்பூரில் செல்வதற்கான சில நடைமுறைகள்
1. சிங்கப்பூரில் பணிச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்நாட்டு மனிதவள அமைச்சகத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. வெளிநாட்டில் பணிச் செய்ய வேண்டும் என்றால் சராசரி ஊதியம், அவர்களுடைய தேவைகள், வயது ஆகிய வரம்புகள் உள்ளன. இவையாவற்றிற்கும் விதிகளின்படி, அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நாம் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
3. வெளிநாட்டவர் சிங்கப்பூர் செல்வதற்கு 55 வயதை வரை வரையறைக்கப்பட்டுள்ளது. மேலும் 50 வயதுக்கு மேல் ஆனவர்களாக இருந்தால் சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதி கிடைக்காது.
4. ஏற்கனவே சிங்கப்பூரில் பணிப்புரிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு மீண்டும் அனுமதி கிடைக்கும்.
5. இது போன்ற திட்டங்கள் இளம் வயதில் உள்ளவர்களுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.