சிங்கப்பூர் இளைஞரால் கண்ணீர் விட்டேன்... சோப்பு விற்கும் பிரபல நடிகை ஐஸ்வர்யா உருக்கம்!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் ஐஸ்வர்யா. இவர் ஆறு படத்தின் மூலம் பிரபலமானதால் சவுண்டு சரோஜா என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும்.
அந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒத்துபோயிருந்தார். அப்போது முன்னணி நடிகையாக வலம் வரும் கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து திருமணம் செய்துகொண்டு துணை நடிகையாக வலம் வரும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.
பின்னர், ஒரு சில சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் தற்போது சோப்பு விற்பதாக பிரபல சேனலில் பேட்டியளித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
இளைஞரால் கண்ணீர் விட்டேன்
அந்த வகையில், சவுண்ட் சரோஜா என அழைக்கப்படுகிற நடிகை ஐஸ்வர்யா பேசுகையில், நான் சோப்பு விற்கிறத கேட்டு சிங்கப்பூரில் இருந்து இளைஞர் வருத்தப்பட்டதாகவும், உங்க அக்கவுண்ட் நம்பரை கொடுங்க பணம் அனுப்புகிறேன் என கேட்டதும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.
அதன் பின்னர், அங்கிருக்கும் முருகன் கோவிலில் போய்ட்டு எனக்காக பிரார்த்தனை செய் அது போதும் என தெரிவித்து இருக்கிறார்.
எனக்கு பெறுமை தான்
மேலும், நான் சோப்பு விற்பதில் எனக்கு எந்த வேட்கமும் இல்லை. எனக்கு பிடித்ததை செய்யுறேன். யாருக்கும் கடனாளியாக இருக்க விரும்பவில்லை.
நான் சம்பாரித்தது எல்லாம் அப்போதே செலவு செய்துட்டேன் இப்போது உழைத்து சாப்பிடுறேன். இந்த வேலையை தான் ஜாலியாக செய்து வருவதாகவும், இப்போது தனக்கு எந்த கடனும் இல்லை எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
அம்மாவிடம் கேட்கவில்லை
அம்மா பற்றி பேசுகையில், லட்சுமி அம்மா தந்தை போல என்னை படிக்க வைச்சாங்க, எனக்கு ஒரு கேரியரை கொடுத்துட்டாங்க, அதுக்கு மேல என் பொறுப்பு தான்.
இதுக்காக அம்மாகிட்ட போய் நான் அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறது பிடிக்காது என பேசியுள்ளார். இவரின் பேச்சு தான் தற்போது ட்ரெண்டாக உள்ளது.