உங்கள் உடல் நலம் பற்றி ChatGPT-யிடம் கேட்கிறீர்களா? இந்த ஆபத்து நிச்சயம்
பலர் தற்போது தங்கள் அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே மற்றும் எம்ஆர்ஐ அறிக்கைகளை ChatGPT, Gemini, Grok போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இது பயனளிக்கலாம் என்ற எண்ணத்தில் செயப்படுவது பெரும்பாலும் தீங்காகி முடிகிறது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தவறான தகவல்களின் பரவல்
இணையம், கூகுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தளங்களில் உள்ள கோடிக்கணக்கான தகவல்களில் நோயாளிகள் அடிக்கடி மோதிக் கொண்டிருக்கின்றனர்.
"நோயாளிகள் தங்கள் அறிகுறிகள் அல்லது சோதனை முடிவுகள் குறித்து இணையத்தில் தேடி வரும்போது, உண்மையான நிலையை விட பெரிதாகவும், பீதியுடனும் மன அழுத்தத்துடன் மருத்துவர்களிடம் வருகின்றனர்," என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், மருத்துவர்கள் தவறான தகவல்களைச் சரிசெய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இது, உண்மையான சிகிச்சைத் திட்டத்தைத் தாமதப்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
சுய நோயறிதலின் அபாயங்கள்
ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர், குறைந்தது பத்து ஆண்டுகள் பயிற்சி மற்றும் அனுபவத்துடன் தான் சிகிச்சை வழங்குகிறார்கள்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு கருவிகள் சில நிமிடங்களில் தான் பெறும் தகவல்களின் அடிப்படையில் பயனர்கள் தவறான முடிவுகளை எடுப்பதைக் காணலாம்.
சில சந்தர்ப்பங்களில், AI கருவிகள் தரும் பதில்கள் காலாவதியானவை, தவறானவை அல்லது குழப்பமூட்டும் வகையிலானவை ஆக இருக்கலாம்.
இது தவறான சிகிச்சை முடிவுகளுக்குக் காரணமாகின்றது. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றமில்லை மருத்துவம் என்பது துல்லிய அறிவியலாக இல்லாது, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் தீர்வு தேவைப்படும் துறையாகும்.
AI கருவிகள் ஒரு பொதுவான விளக்கம் வழங்கினாலும், அது ஒரு மருத்துவரின் நேரடி ஆலோசனைக்கு மாற்றமாக இருக்க முடியாது.
நோயாளிகளுக்கான ஆலோசனை
உங்கள் அறிகுறிகளை ஆன்லைனில் தேடுவதற்குப் பதிலாக, நேரடியாக மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.
உங்கள் பரிசோதனை முடிவுகள், சிகிச்சை திட்டம் போன்றவை பற்றி AI தளங்களை மட்டுமே நம்ப வேண்டாம்.
AI மற்றும் இணையம் ஒரு கற்றல் கருவியாக இருக்கலாம், ஆனால் அவை ஒரு தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக இருக்க முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
