பாதங்களில் வெடிப்பு இருக்கா? அப்போ இதை செய்தால் போதும்
பெண்கள் பொதுவாக சரும அழகில் கவனம் செலுத்துவது அதிகம். அவ்வாறு சருமத்தை மட்டும் பராமரிப்பவர்கள் தங்களின் பாதங்களை மறந்து விடுகின்றனர்.
பாதங்களில் வெடிப்பு
பாதங்களில் நமது மற்ற உடல் பகுதிகளில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால் வரண்டும் மாசு படிந்தும் காணப்படும்.
இதை பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வது இல்லை. இதனால் நாளடைவில் பாதங்கள் வெடித்து பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும்.
இதனால் பாதங்களின் அழகு மட்டும் இல்லாமல் போகாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வகையில் சில குறிப்புகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்
உங்கள் பாதங்களை முதலில் வெதுவெதுப்பாக நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும் .
பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து அந்த கலவையை உங்கள் பாதத்தில் நன்றாக பூச வேண்டும். பின் இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரு இரவு முழுவதும் பாதத்தை அப்படியே விட்டு விட வேண்டும்.
மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் காலை நன்றாக கழுவிய கழுவிய பின் எண்ணெய் அல்லது கற்றாலை ஜெல்லை தடவி தேய்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால் பாதம் வெடிப்பு பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். மாசுக்கள் பட்டு அழுக்கடையாமலும் பாதங்களை பாதுகாக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |