Vastu Tips: காலையில் எழுந்தவுடன் இந்த பொருட்களை பார்க்காதீங்க.. நாள் முழுதும் பிரச்சனையாம்
காலையில் எழுந்து நாம் பார்க்கும் சில விஷயங்கள் அசுபமாக கருதப்படும் நிலையில், அவை என்னென்ன விடயங்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது பெரும்பாலான இந்துக்கள் கடைபிடித்து வரும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது.
வீட்டில் பொருட்களை வைப்பதில் தொடங்கி, காலையில் தூங்கி எழுந்து நாம் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அனைத்தையும் வாஸ்து சாஸ்திரத்தின் படி தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக புதிதாக பிறக்கும் நாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் தூங்கி எழும் போதே நினைத்துக் கொண்டு தான் எழும்புகின்றோம். ஆம் அன்றைய தினம் சிறப்பாக இருக்க முதலில் காலை பொழுதும் நன்றாகவே அமைய வேண்டும்.
அதன்படி வாஸ்து குறிப்பில் சில விடயங்களை நாம் தூங்கி எழுந்து பார்ப்பது அசுபமாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறு காலையில் நாம் என்னென்ன விடயத்தினை அவதானிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
image: canva
எந்த பொருட்களை பார்க்கக்கூடாது?
காலையில் எழுந்ததும் கடிகாரம் பார்க்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. ஆனால் பழுதான கடிகாரத்தை தவறுதலாக பார்த்து விடக்கூடாது. ஏனெனில் பழுதான கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இதே போன்று காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் காலையில் எழுந்து கண்ணாடி பார்ப்பது தவறாகும். இது அசுபத்தின் அடையாளம் என்று கூறப்படுகின்றது. கண்ணாடியில் முகத்தை பார்த்தால் நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுமாம். இருப்பினும் புத்துணர்ச்சியுடன் கண்ணாடி பார்த்தால் மகிழ்ச்சியும், உற்சாகமும் நாள் முழுவதும் இருக்குமாம்.
காலையில் எழுந்ததும், வாஷ் பேஷனில் கழுவாமல் இருக்கும் பாத்திரத்தினை பார்க்கக்கூடாது. ஆதலால் தான் பெரும்பாலான வீடுகளில் இரவே பாத்திரத்தினை கழுவி வைத்துவிடுவார்கள். இவ்வாறு அழுக்கு பாத்திரத்தினை பார்த்தால் நிதி சிக்கல்கள் ஏற்படும்.
image: istock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |