நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..!
பொதுவாகவே நம்மில் ஒரு சிலர் தமது பொருட்களை சிலருக்கு கொடுக்கமாட்டார்கள், ஆனால் ஒரு சிலர் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வது அவர்களின் இயல்பு.
ஆனால் ஒரு சில பொருட்களை யாருக்குமே கொடுக்க கூடாது அப்படியானயானதொரு பொருள் தான் டவல்.
நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தால் உங்களால் அவருக்கும் அவரால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
அப்படியென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை விபரமாக பார்க்கலாம்.
வைரஸ் கிருமி
வைரஸ் கிருமியால் பெண்களின் பிறப்புறுப்பில் மரு மாதிரியொன்று வரும், இதற்கு ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணமாகும்.
இந்த வைரஸால் பாதிக்கப்படுவது ஒன்று பாலியல் உறவுகளினால் மற்றொன்று உடல் தொடர்புகளின் மூலமாகும். இந்த வைரஸில் 99 சதவீதம் பாலியல் உறவுகளினால் மாத்திரம் அதிகம் நிகழ்கிறது.
மேலும், இந்த வைரஸ் இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை அடுத்தவர் பயன்படுத்தினால் அவர்களுக்கு இந்த வைரஸ் இலகுவாக தொற்றிக் கொள்ளும்.
மரு வடிவில் இருக்கும் இந்த வைரஸில் இருந்து வரும் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் நிச்சயமாக தொற்று பரவும்.
செய்யக்கூடாதவை
இந்த மருவைக் கிள்ளக்கூடாது, கிள்ளினால் மருவிற்குள் இருந்து வரும் திரவம் ஒரு சொட்டு பட்டால் கூட பெண்ணுறுப்பிலோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் முழுவதும் பரவி விடும்.
இது பற்றி நீங்கள் பெரிதும் பயப்படத்தேவையில்லை. உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிதான் இதற்கு காரணம்.
மேலும் சிறிதாக இருந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் மரு பெரிதாகிக்கொண்டே போனால் சரும வைத்தியரை நாடவும்.
இதற்கென்று ஒரு க்ரிம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப்பயன் படுத்தும் போது வெளியிடங்களில் படாமல் மரு இருக்கும் இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.