நீங்கள் அதீத டீ பிரியரா? அப்படியானால் டீ யுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டாதீர்கள்... ஆபத்து!
பொதுவாகவே நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காமல் பொழுதே போகாது. ஒரு டீ கொடுத்தாலும் அதை ரசித்து ருசித்து குடிப்பார்கள். சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ஆனால் ஒரு நாளைக்கு டீ இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
காலை எழுந்ததிலிருந்து இரவு தூக்க செல்லும் வரைக்கும் தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள டீ -யை அதிகம் அருந்துவார்கள். அப்படி டீ அருந்துபவர்கள் டீயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது மீற சாப்பிட்டால் ஆபத்தாக மாறும்.
டீயுடன் சாப்பிடக் கூடாதவை
ஒரு சிலர் எழுமிச்சை தேநீர் அருந்துவார்கள். ஆனால் அவ்வாறு அருந்துவது ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சியும் தேநீரில் காபினும் இருக்கிறது. இவை இரண்டும் சேரும் போது சில விளைவுகள் ஏற்படும். மேலும், இதனால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வயிறு எரிச்சல் என்பன ஏற்படும்.
தேநீரில் காபின் இருப்பது நாம் அறிந்த ஒரு விடயம் தான். அதனால் தேநீருடன் மஞ்சள் கலந்த பொருட்களுடன் சேர்த்து அருந்துவது ஆபத்தை ஏற்படுத்தும் ஏனெனில் மஞ்சள் சூடான ஒரு பொருளாகும். டீயுடன் மஞ்சள் கலந்து குடிக்கும் போது உடலில் சூட்டை அதிகரிக்கும் இதனால் வியர்வை மற்றும் தலைசுற்றல் போன்ற அசௌரியங்கள் ஏற்படும்.
பொதுவாகவே ஒரு சிலர் மழைக்காலங்களில் அல்லது டீ அருந்தும் போது டீயுடன் வறுத்த அல்லது பொறித்த திண்பண்டங்களை சேர்த்து டீ அருந்துவார்கள்.
ஆனால் அவ்வாறு அருந்தும் போது உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுமாம். ஏனெனில்நன்றாக பொறிக்கப்பட்ட உணவுகளை டீயுடன் சாப்பிடும் போது அதனுள் சேர்க்கப்படும் கடலை மா ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |