தப்பித்தவறியும் இந்த உணவுப் பொருட்களுடன் சர்க்கரையை சேர்த்து சாப்பிடாதீங்க!
இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஆனால் அதிகமான சர்க்கரை என்றுமே உடலுக்கு தீங்கைதான் விளைவிக்கும்.
நாம் சுவையை அதிகரிப்பதற்காக சில சுவையூட்டிகளை சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், சில உணவுப்பொருட்களுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தக் கூடாது.
image - taste of home
அது உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கும். சரி இனி எந்தெந்த உணவுப் பொருட்களுடன் சர்க்கரையை சேர்த்து உண்ணக்கூடாது என்று பார்ப்போம்.
காபி - நம்மில் அனேகம் பேருக்கு காபியுடன் சர்க்கரை சேர்த்து அருந்துவது ஒரு பழக்கமாகக் காணப்படுகின்றது. ஆனால், சர்க்கரை இல்லாமல் காபி குடிப்பது நிறைய நன்மைகளை வழங்கும்.
பால் - பால் குடிக்கும்பொழுது அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். ஆனால், பாலில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது அதிக நன்மையளிக்கும்.
image - cnn
பழங்கள் - பொதுவாகவே பழங்களில் சர்க்கரை இருக்கும். ஆனால், நாம் பழச்சாறோ பழக்கலவையோ செய்யும்பொழுது அதிலும் சர்க்கரை சேர்க்கின்றோம். அதிகமான சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
பழ இனிப்புகள் - பழங்களினால் செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையென்றால் மாத்திரம் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.