தப்பித்தவறியும் பாகற்காயுடன் இந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீங்க!
பொதுவாகவே காய்கறிகளில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் பாகற்காயை எடுத்துக்கொண்டால், அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
ஆனால், பாகற்காயுடன் அல்லது பாகற்காயை உண்டபின்னர் உண்ணக் கூடாத சில உணவுப் பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான காரணம் என்னவென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை பாகற்காகயுடன் உண்ணும்போது அது ஆபத்தான பொருளாக மாறுகிறது. அவை என்னென்ன பொருள் என்று பார்ப்போம்.
image - Cholas Super Market
வெண்டைக்காய்
வெண்டைக்காய் மிகவும் சத்து மிகுந்த ஒரு காய்கறி என்றபோதிலும் அதை பாகற்காயுடன் சாப்பிடும்போது பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
image - Yale Medicine
பால்
பாகற்காய் சாப்பிட்ட பின்னர் பால் குடித்தால், அது மலச்சிக்கல், வயிறு எரிச்சல் மற்றும் வலி போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
image - Daily Mirror
மாம்பழம்
பாகற்காயுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது குமட்டல், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற ஜீரண பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
image - News18 Tamil
முள்ளங்கி
பாகற்காய் மற்றும் முள்ளங்கியின் தாக்கமானது, தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கும்.
image - Health Shots
தயிர்
பாகற்காயுடன் தயிரை சேர்த்து உண்ணும்போது அது பல வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு வழி வகுக்கும்.