சர்க்கரை நோயின் மோசமான புண்களையும் ஆற்றும் அதிசய பொருள்! எப்படி பயன்படுத்துவது தெரியுமா?
குங்கிலியம் வெள்ளை, சிவப்பு, பூணைக் கண் குங்கிலியம் என்று மூன்று வகைகளில் உள்ளது.
இவை மூன்றுமே ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான குணங்களையும் சேர்த்து கொண்டுள்ளது.
இதில் சிவப்பு குங்கிலியம் என்பது சீமை குங்கிலியம் என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளை குங்கிலியம் நாட்டு குங்கிலியம் என்றும் , பூனை குங்கிலியம் ரூமிமஸ்தகி என்றும் சொல்லப்படுகிறது.
கருமருது என்னும் மரத்தை கீறி அதில் வடுக்களை உண்டாக்கி அதிலிருந்து வடியும் பிசினை சேகரித்து உறைந்து மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இது தான் குங்கிலியம் ஆகும். இந்த அற்புத மருந்து பொருள் எப்படி நீரிழிவு நோயாளிகளின் புண்களை குணப்படுத்தும் என்று பார்க்கலாம்.
புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது
- ஆயுர்வேத மருந்துகடைகளில் குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய தைலம், குங்கிலிய பற்பம் போன்றவை கிடைக்கும்.
- சர்க்கரை நோயால் உண்டாகும் புண் கட்டுப்படாமல் தீவிரமாகாமல் இருந்தால் அதை குணப்படுத்த குங்கிலியம் உ தவும்.
- குங்கிலியம் தேன் மெழுகு இரண்டையும் 100 கிராம் அளவு எடுத்து மெல்லிய தீயில் உருக்கி அரை லிட்டர் நல்ல்லெண்ணெயில் காய்ச்சவும்.
- இவை நன்றாக காய்ந்ததும் காசுக்கட்டி, கந்தகம், வெங்காரம் 5 கிராம் எடுத்து பொடியாக்கி போட்டு ஆறியதும் வடிகட்டி விடவும்.
- இதை வெள்ளைதுணியில் நனைத்து புண்களின் மீது தடவி போட்டு வந்தால் புண்கள் ஆறக்கூடும்.