இந்த 5 உணவுகளை மறந்தும் தேநீர்க்கூட சேர்த்து சாப்பிடுறாதீங்க- ஆபத்து
பெரும்பாலனவர்கள் தினசரி தேநீர் அருந்துவதை வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டுள்ளனர்.
நம்மில் நாளை துவங்குவதற்கு என்ன இல்லாவிட்டாலும் பொருத்து கொள்வார்கள். டீ அல்லது காபி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
உலகிலேயே தண்ணீருக்கு பிறகு அதிக அளவில் அருந்தப்படுகிற பானமானது தேநீர் என்று அமெரிக்காவின் தேயிலை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவிக்கின்றன.
தேநீரானது மன அழுத்தத்தினை போக்கக்கூடிய பானம். அதுமட்டுமன்றி அதன் நறுமணமானது பலன்களை அமைதிப்படுத்தி மனதை தளர்த்த செய்கிறது.
தேநீரானது நல்ல சுவை மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
இவ்வளவு நன்மைகளை கொடுத்தாலும் சில உணவுகளுடன் சேர்த்து எடுத்து கொள்ளும் பொழுது பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அப்படி என்னென்ன உணவுகளை தேநீருடன் சேர்த்து கொள்ளக் கூடாது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேநீருடன் சேர்க்கக்கூடாத உணவுகள்:
1.தண்ணீர்:
தேநீருடன் தண்ணீரை அருந்துவதினால் அதிலுள்ள காஃபின் உறிஞ்சப்படுவதைக் குறைக்கபடுவது மட்டுமல்லாது செரிமான செயல்முறையை பாதிக்கிறது. மோசமான விளைவை ஏற்படுத்துகிறது, அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
2.பச்சை வெங்காயம்:
வெங்காயத்தில் உள்ள தனிமங்களானது வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையை உண்டாக்கூடும் என்பதால் வெங்காயத்தை தேனீருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனையை உண்டாக்குகின்றது.
3.மஞ்சள்:
தேயிலை மற்றும் மஞ்சளில் உள்ள ரசாயன கலவைகள் வயிற்றில் தொந்தரவு ஏற்படுத்துவது மட்டுமின்றி செரிமானத்தை பாதிக்கிறது. ஜீரண பிரச்சனையை உண்டாக்கும் மூலக்காரணிகளை மஞ்சளில் உள்ள குர்குமின்னும், தேநீரில் உள்ள டானின்களும் சேர்ந்து உருவாக்குகின்றன.
4.எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் டீயுடன் சேர்ந்து வயிற்று எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு கலந்த பொருட்களை லெமன் டீயுடன் உட்கொள்வதை தவிர்த்தல் நல்லது.
5.பருப்பு மாவு:
பருப்பு மாவில் செய்யப்பட்ட உணவுகளான பக்கோடா அல்லது சீலா போன்றவற்றை தேநீருடன் சாப்பிடுவதால் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |