பூண்டு தண்ணீரை இப்படி குடித்தாலே போதும்! பல நோய்கள் காணாமல் போகும்
பொதுவாக நமது வீட்டிலிருக்கும் சில பொருட்களை கொண்டு எமது உடலிருக்கும் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் சமையறையிலிருக்கும் பூண்டை என்ன வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
பூண்டின் மகிமை
பொதுவாக பூண்டை பலர் அதனுடைய வாசணையின் காரணமாக உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதில் பல நோய்களை குணமாக்குவதற்கான மருத்துவ குணங்கள் இருக்கிறது.
பூண்டை சமைத்து மற்றும் பச்சையாக உணவில் சேர்த்து கொள்வதை விட தண்ணீரில் சேர்த்து பானமாக பருவதில் அதீத பயனைப் பெற முடிகிறது.
இரண்டு பூண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் பருக வேண்டும், இவ்வாறு பருகும் போது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பல நோய்கள் குணமாகும்.
வைரஸ் நோய்கள் இருக்கும் போது பூண்டு நீரை பருக வேண்டும். ஏனெனில் பூண்டில் இருக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுடன் எதிர்த்து போராடுகிறது.
செரிமான பிரச்சினையுள்ளவர்கள் பூண்டை தண்ணீருடன் சேர்த்து தினமும் பருக வேண்டும்.
வயிற்று வலி, வாயு, பிடிப்புகள், வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் முற்றாக குணமடையும்.
பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வயிற்றுவலி அதிகமாக இருக்கும். இது போன்ற காலங்களில் காலையில் பூண்டுடன் தண்ணீரை சேர்த்து பருக வேண்டும். இது ரத்த ஓட்டம் சீராக அமைத்து வலிக்கு நிவாரணம் தருகிறது.