தீபாவளிக்கு இந்த பொருட்களை யாருக்கும் தானம் கொடுக்காதீங்க... கஷ்டம் ஏற்படுமாம்
தீபாவளி கொண்டாட்டமான இன்று எந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்த நல்ல நாளில் இல்லாத நபர்களுக்கு சில பொருட்களை தானம் செய்கின்றனர். அந்த வகையில் நாம் தானம் செய்யக்கூடாத பொருட்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்று தானம் செய்யக் கூடாதவை
தீப்பற்றக்கூடிய பொருட்களாகி எண்ணெய், நெய் இவற்றினை தானமாக கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் தீ விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை ஏற்படலாம்.
உப்பை தானமாகவோ அல்லது கடனாகவே தானம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.
தீபாவளியன்று பணப் பரிவர்த்தனை செய்வது அபசகுணமாக கருதப்படுகின்றது. கடன் கொடுக்கவோ, நிலுவை தொகையையும் செலுத்தக்கூடாது. மேலும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகிவிடுவீர்கள்.
தீபாவளியன்று இரும்புப் பொருட்களை தானமாகவோ அல்லது கடனாகவோ கொடுப்பது அபசகுனமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இரும்பு ராகுவுடன் தொடர்புடையது என்பதால் தானம் செய்யக்கூடாது.
கருப்பு நிறப் பொருட்களை தானம் செய்யக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
உடைந்த அல்லது பழுதடைந்த பொருட்களை தானம் செய்வது தோல்வியையும் துரதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் என்பதால் பழுதடைந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது.
எதை தானம் செய்யலாம்?
ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் தீபாவளியன்று உணவுப் பொருட்கள், கருப்பு இல்லாத மற்ற வண்ண ஆடைகளையும், பழங்கள் மற்றும் இனிப்புகளை தானமாக கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |