உடல் எடை மெலிந்து காணப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்- ரசிகர்களின் மனதை நொறுக்கிய புகைப்படம்!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் திகழ்ந்தவர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் தான். ஹீரோவாக கலக்கி வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க பொறுப்புகளை ஏற்று அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்ததாக பலரும் அவரை புகழ்ந்து கூறி உள்ளனர். இணைய உலகம் இல்லாத காலத்தில் அப்போதே பல ஏழை எழிய மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
ஆனால், சமீபகாலமாக விஜயகாந்துக்கு பேச்சு திறன் குறைந்ததால் அதிகளவு மேடைகளில் பங்கேற்பதில்லை. அதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, திடீரென அவருக்கு கொரானா வந்தது. அதற்காக தீவிர சிகிச்சையில் இருந்தார். சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்த விஜயகாந்த் தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அ.ம.மு.க - தே.மு.தி.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கையெழுத்தானது. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்போது, அரசியல் சம்பந்தமாக டிடிவி தினகரன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது பொம்மை போல் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு வெறும் கையை மட்டும் அசைத்து கொண்டிருக்கும் விஜயகாந்தை பார்த்து ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.