DJD: பஞ்சமிக்கு சீரியல் நடிகை கொடுத்த விருது.. எழுந்து நின்று மரியாதை செலுத்திய நடுவர்கள்
DJD-ல் சீரியல் நடிகை பிரியங்கா பஞ்சமிக்கு கொடுத்த விருது நடுவர்கள் உட்பட அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
கண்ணீருடன் வந்த அம்மா
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், 25 வயதாகும் பஞ்சமி என்ற பெண்ணொருவர் முடிந்தவரை அவருடைய நடன திறமையை வெளிகாட்டி வருகிறார். அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகர் கதிர் ஆடி வருகிறார்.
இந்த வாரம் Dancing with Stars Round என்பதால் பஞ்சமி- கதிர்க்கு துணையாக ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா களமிறங்கியிருக்கிறார். நடனம் ஆடி முடிந்தவுடன் பிரியங்கா அவர் வாங்கிய விருது ஒன்றை பஞ்சமிக்கு கொடுத்திருக்கிறார்.
இதனை பார்த்த நடுவர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் எழுந்து நின்று கைத்தட்டியிருக்கிறார்கள்.
இப்படியாக இந்த வார ப்ரோமோ மற்றும் எபிசோட் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |