அப்படியொரு குட்டை உடையில் பார்ட்டிக்கு சென்ற பூஜா ஹெக்டே! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை பூஜா ஹெக்டே செம ட்ரெண்டிங்கான குட்டை உடையில் பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பூஜா ஹெக்டே
முகமூடி திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.
முகமூடி திரைப்படம் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைபடத்தில் நடித்து தமிழில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மொழி போதம் இன்றி பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதியின் இறுதி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் குட்டை ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சிகாட்டி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வாயடைத்துப்போகச் செய்துள்ளதுடன் குறித்த புகைப்படங்கள் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |