DJD மேடையில் புல்லரிக்க வைத்த ஜோடிகள்- என்ன சொல்வது என தெரியாமல் திணறிய தருணம்
DJD மேடையில் ஜோடிகளின் நடனம் அங்கிருந்தவர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.
கடந்த மார்ச் 1ஆம் திகதி மாஸாக ஆரம்பித்த இந்த நடன நிகழ்ச்சியை விஜயுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
சேனல் தாவிய மணிமேகலை DJD மேடையில் என்ன செய்ய போகிறார் என்பதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் சினேகா, பாபா பாஸ்கர் நடுவராக களமிறங்க இவர்களுடன் புதியதாக வரலட்சுமி சரத்குமாரும் நடுவராக களமிறங்கியுள்ளார். இதனால் வழக்கத்திற்காக மாறாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.
திறமை இருந்தும் பல இடங்களில் தட்டிக்கழிக்கப்பட்ட போட்டியாளர்கள் இங்கு கலந்து கொண்டுள்ளனர்.
மெய்சிலிர்க்க வைத்த நடனம்

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல்
இந்த நிலையில், ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கிய ரவீனா தாஹா, பிரகாஷ் என்ற இளைஞருடன் இணைந்து DJD நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த வாரம் DJD நிகழ்ச்சியில் பக்தி பரவசம் சுற்று செல்கிறது. அதில், ஜோடிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், பக்தி பரவசம் சுற்றில் ஆடிய ரவீனா- பிரகாஷ் இருவரும் நடுவர்கள் உட்பட அரங்கத்தினரும் மெய்சிலிர்த்து போகும் வகையில் ஆடியுள்ளனர்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
