மேடையில் கதறிய மணமகன்! கண்டுகொள்ளாத உறவினர்கள்: பரிதாபமாக உயிரிழந்த சோகம்
மணமேடையில் மணப்பெண்ணுடன் நின்று கொண்டிருந்த மணமகன் திடீரென மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உயிரை பறித்த டிஜே இசை
பீகார் மாநிலம் ஸ்ரீராம்மகரி மாவட்டம், இந்தவார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார். இவரது திருமண நிகழ்ச்சியாக டிஜே இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சியின் சத்தம் அதிகமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை பலமுறை சத்தத்தினை குறைக்குமாறு உறவினர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் யாரும் அவர் கூறியதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட சிறிது நேரத்திலேயே மணமகன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆடம்பரம் என்ற பெயரில் அரங்கேறிய டிஜே இசையினால் பரிதாபமாக உயிர் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் குறித்த நபர் அதிக சத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.