முகத்தை பளபளப்பாக்கும் எலுமிச்சை பழம் Face pack- தினமும் போடலாமா?
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம்.
இப்போது புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.
இப்படியான சூழ்நிலையில் அழகாக இருக்க வேண்டுமென்று நிறைய பேர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் சிலருக்கு அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நேரம் இருக்காது.
அப்படியான சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டில் ஒரு சில பொருட்களை கொண்டு Face pack செய்து போடலாம்.
அந்த வகையில், புத்தாண்டில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கீழுள்ள டிப்ஸ்களை வீட்டில் செய்து பார்க்கலாம்.
தேன்+ எலுமிச்சை Face pack
பொதுவாக மற்ற பழங்களை விட எலுமிச்சையில் அதிகமான வைட்டமின் சி உள்ளது. அதே போன்று தேனில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன.
இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து முகத்திற்கு போடும் பொழுது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அகற்றப்படுகின்றது.
அத்துடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து போடும் பொழுது சருமம் பளிச்சென்று இருக்கும்.
செய்முறை
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பேக்கை போட முன்னர் முகத்தை நன்றாக கழுவி துடைக்க வேண்டும்.
அதன் பின்னர் முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |