இந்த தீபாவளிக்கு சுவையான நெய் மைசூர் பாக்கை வீட்டில் இப்படி செய்யுங்க!
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு வகைகள்,. அதிலும், இனிப்பு வகைகளில் மைசூர் பாக் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி தித்திப்பான நெய் மைசூர் பாக்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
எண்ணெய் – சிறிதளவு
நெய் – சிறிதளவு
செய்முறை விளக்கம்
மைசூர் பாக் தயார் செய்ய முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் சர்க்கரையை இட்டு பாகாக மாற்றவும்.
அடுத்து, கப்பில் உள்ள கடலை மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.
சர்க்கரை பாகு தயாரானதும் அவற்றுடன் முன்னர் மிக்ஸ் செய்துள்ள கடலை மாவை சேர்த்து கலக்கவும்.
அதைத்தொடர்ந்து சிறிதளவு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் சூடு செய்து கொள்ளவும். பின்னர், பாகு மற்றும் மாவை பாத்திரத்தில் தொடர்ந்து கிளறும் போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
மேலும், மாவு நன்கு கெட்டியான பிறகு ஒரு சதுரமான பாத்திரத்தில் இடவும். அவை நன்கு ஆறிய பின்னர் ஒரு கத்தியால் சதுரமாக வெட்டவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவைமிகுந்த தீபாவளி இனிப்பான நெய் மைசூர் பாக் தயார்! இனிப்போடு இந்த தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுங்கள்..