தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகும் 3 முக்கிய படங்கள் - ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சினிமா விருந்து!
பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் மட்டுமல்லாது, புதிய திரைப்படங்களைக் குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான்.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள மூன்று முக்கியத் திரைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூர்யாவின் 'சீன்'
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாகவும், நஸ்லேன் சைக்கோ வில்லனாகவும் நடித்துள்ளனர்.வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2'
நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை மற்றும் கற்பனை அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், தீய சக்தியிடமிருந்து ஓர் இளவரசனைக் காப்பாற்றும் கதைக்களம் இடம்பெற்றுள்ளது. இப்படமும் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரன்பீர் கபூர் - சாய் பல்லவியின் 'ராமாயணா – பாகம் 1'
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்திருப்பது படத்தின் கூடுதல் சிறப்பாகும்.பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
வழக்கமாகத் தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு அவர்களின் படங்கள் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இருப்பினும், சூர்யா, நயன்தாராவின் படங்களும் பிரம்மாண்டமான 'ராமாயணா' திரைப்படமும் இந்தத் தீபாவளியில் திரையரங்குகளில் ரசிகர்களின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |