தீபாவளி ஸ்பெஷல்; நாவில் எச்சில் ஊரும் மினி ஜிலேபி.. எப்படி செய்றாங்க பாருங்க!
பொதுவாக நம்மில் சிலருக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதன்படி, தீபாவளி வந்தாலே வீடுகளில் கொண்டாட்டம். இது போன்ற விழாக்களின் போது வீடுகளில் இனிப்புகளுக்கும் பஞ்சமே இருக்காது.
வருடம் வருடம் ஒரே வகையான இனிப்புகளை செய்யாமல் வருடத்திற்கு புது புது ரெசிபி முயற்சித்தால் எப்படி இருக்கும். என சிந்தித்து கொண்டிருக்கும் போது தான் நாவில் எச்சில் ஊற வைக்கும் மினி ஜிலேபி ஞாபகத்திற்கு வருகின்றது.
வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் இது போன்ற ஸ்வீட்ஸ் ஐட்டங்களை வாங்கி கொடுப்பதற்கு சற்று யோசிப்போம்.
அந்த வகையில், மினி ஜிலேபியை எளிமையாகவும் மற்றும் வேகமாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- சக்கரை- 2 ½ கப்
- ஏலக்காய் பொடி
மினி ஜிலேபி எப்படி செய்றாங்கன்னு பாருங்க
முதலில் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து ஜிலேபி பதத்திற்கு அரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் உப்பு, மஞ்சள் அல்லது கலர் பொடி சேர்த்து நான்கு கலந்து கொள்ளுங்கள்.
இது ஒரு புறம் இருக்கையில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு கெட்டியான சர்க்கரை பாகு தயாரிக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஜிலேபி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பிளாஸ்டிக் பையில் ஜிலேபி மாவை சேர்த்து கூம்பு போன்ற வடிவமைப்பில் பிடித்து கீழ் உள்ள கவரில் சிறு ஓட்டையை போட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் குட்டி குட்டி ஜிலேபியாக பிழிந்து விடுங்கள்.
ஜிலேபி நன்கு பொரிந்து வந்ததும் ஜிலேபியை எடுத்து சர்க்கரை பாகுடன் சேர்த்து அதில் ஒரு மூன்று நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரெசிபியை சரியாக செய்தால் குட்டி ஜிலேபி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |