செழியன் பிரிவை பட்டாசு போட்டு கொண்டாடிய ஜெனி.. வீடியோவை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்
செழியன் பிரிவை பட்டாசு போட்டு கொண்டாடிய ஜெனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார்.
மாலினியுடன் தொடர்பு
தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.
தற்போது செழியன் - மாலினி விவகாரம் ஜெனி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த நிலையில், ஜெனி அவரது தாய் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பாக்கியாவை சத்தம் போட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ராதிகா இருந்து வருகின்றார்.
செழியன் இல்லாமல் தீபாவளியா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெனி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்க்கும் பொழுது செழியனின் பிரிவு கொஞ்சம் கூட இல்லாமல் ரொம்ப சந்தோசமாக இருப்பது போல் தெரிகிறது.
ஜெனி மற்றும் குழந்தை இல்லாமல் தனியாக இருக்கும் செழியன் இந்த புகைப்படங்களை பார்த்தால் மனமுடைந்து போய் விடுவார் என பாக்கியலட்சுமி ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
ஜெனியின் இந்த முடிவு சரியானதா? தவறானதா? என ரசிகர்கள் தீவிரமான வாதித்து வருகிறார்கள்.
மேலும் பாக்கியாவை போல் அசத்தலாக இருந்து வரும் ஜெனிக்கு ரசிக பட்டாளம் அதிகரித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |