உடலை கேலி செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த நடிகை! என்ன சொல்லியிருக்கிறார்?
பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதியை உருவ கேலி செய்தவர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஸ் நடிப்பில் வெளியான “பேச்சுலர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் திவ்ய பாரதி.
இந்த படம் இவருக்கு பாரிய வெற்றியை கொடுத்தது என்றே கூற வேண்டும். இவரின் யதார்த்தமான நடிப்பில் பல கோடி ரசிகர்களை ஒரே படத்தில் வசப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பட வாய்ப்புகள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யபாரதி அவ்வப்போது புடவை கேலக்ஸனில் போட்டோ ஷீட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது உடல் அமைப்பை கிண்டலடித்தவர்களுக்கு இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “என் உடல் வடிவம் போலியானது, இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என சிலர் கூறுகின்றனர். மேலும் பேண்டா பாட்டில் போன்று இருக்கிறேன் எனவும் கிண்டல் செய்கின்றனர்”.
மேலும் இந்த உடலமைப்பு கல்லூரி காலத்தில் இப்படி தான் இருக்கிறது. நான் நன்றாக சாப்பிடுவேன், உடற்பயிற்சிக் கூட செய்ய மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவு பல நடிகைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என பல கருத்துகள் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் திவ்ய பாரதிக்கு ஆதரவளிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.