தொடரும் விவாகரத்து சர்ச்சை - சொறிஞ்சு விட்டு வேடிக்கை பார்க்கும் மீடியா.. அம்மாவுக்கு சார்பான மகள்
அம்பானி வீட்டு விசேஷத்தில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் உலக அழகி பட்டம் பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் உலக அழகி என கூறும் போது முதலில் ஞாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.
90ஸ் கிட்ஸ்களுக்கு கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில், தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் இருக்கிறார்.
அம்மாவுக்கு ஆதரவாக நிற்கும் மகள்
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மோதிரம் இல்லாமல் வந்துள்ளார்.
அதே சமயம், அபிஷேக் பச்சனும் கையில் மோதிரம் இல்லாமல் நிகழ்ச்சிகளில் தனியாக கலந்து கொண்டார்.
இந்த விடயங்களை கவனித்த மீடியாக்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டார்களா? இதற்கு காரணம் அபிதாப் பச்சனின் மனைவி தான்.. என பல செய்திகள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்து வகையில், மும்பையில், நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அபிஷேக் பச்சன் தன் குடும்பத்தினருடன் தனியாகவும் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாகவும் வந்திருந்தார்கள்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே முக்கிய ஆதாரமாக சிக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |