Dissociative identity disorder(DID): பன்முக ஆளுமைக் கோளாறு- அறிகுறிகளும் சிகிச்சையும்
Dissociative identity disorder(DID) என்பது பன்முக ஆளுமைக் கோளாறு என்பதாகும், தங்களது உடலில் பல ஆளுமைகள் இருப்பதாக உணரலாம், அந்த ஆளுமைகளுக்கு வெவ்வேறு பெயர்கள், வயது, பாலினம் மற்றும் தோற்றம் இருக்கலாம்.
ஆளுமைகள் மாறும் போது நினைவகத்தில் மாற்றங்கள் நிகழும், ஏதேனும் ஒரு அதிர்ச்சிகர சம்பவத்திற்கு பின்னர் இந்த பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதன் முக்கியமான அறிகுறியே ”மறதி” குறித்த பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அன்றைய தினத்தை கழிப்பதே சிரமமாக இருக்கலாம்.
இதனால் உங்களது வேலைகளிலும் மாற்றங்கள் நிகழும், இதில் இரண்டு வகைகள் உண்டு.
Possession: வெளிப்புறத்தில் இருந்து ஏதோ ஒன்று உங்களை கட்டுப்படுத்துவது போன்று உணர்வீர்கள். மற்றவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் உங்களது நடத்தைகளில் மாற்றங்கள் இருக்கும்.
Nonpossession: ஒரு திரைப்படத்தில் இருப்பது போன்ற மாற்றத்தை உணர்வீர்கள், மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
அறிகுறிகள்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆளுமைகள் இருப்பதாக உணர்தல்
- மறதி
- பதட்டம்
- மனச்சோர்வு
- தற்கொலை எண்ணங்கள்
- தனக்கு தானே தீங்கிழைத்துக் கொள்வது
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் வெறும் 1.5 சதவிகித மக்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
ஆண்களை விடவும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், யாரோ ஒருவர் உங்களை கட்டுப்படுத்துவது போன்ற உணர்ந்தாலோ, உங்களை நீங்களாகவே உணர முடியாத பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
அதிகமான மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், துஷ்பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு DID வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
DID உள்ளவர்கள், சில நேரங்களில் அம்னீஷியாவால் பாதிக்கப்படலாம். கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க நேரிடலாம்.
வரும்முன் காக்க
மனஅழுத்தம் கொடுக்கும் சூழ்நிலைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ளுங்கள்.
நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
DID உள்ளவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அதிகம் இருக்கும் அல்லது தன்னை தானே காயப்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வாறான சூழலில் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்தவும்.
சிகிச்சைகள்
DID இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் பட்சத்தில், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைப்பதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார்கள் மற்றும் உளவியல் ரீதியான மேல்சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.
இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அறிகுறிகளில் முன்னேற்றம் இருக்கும், வாழ்வை சிக்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு மருத்துவர்கள் உதவுவர்.