வீட்டில் காலாவதியாகி, பயன்படுத்தாத மாத்திரைகளை தூக்கி வீச முன் இதனை தெரிஞ்சிக்கோங்க..! கவனம் தேவை
பொதுவாக காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், பல்வலி ஆகிய பிரச்சினைகள் வந்து விட்டால் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவோம்.
நோய் சரியாகும் வரை சாப்பிட்டு விட்டு கொஞ்ச நாட்களில் மருந்துகளை சாப்பிடாமல் நிறுத்தி விடுவோம்.
இந்த மாத்திரைகளை சுமாராக ஒரு 6 மாதக்காலத்திற்கு ஒரு முறை சரி மருந்து டப்பாவிலிருந்து அப்புறப்படுத்தும் பழக்கம் எம்மில் சிலருக்கு இருக்கும். இவ்வாறு அப்புறப்படுத்துவது பழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் இது போன்ற மருந்து வில்லைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
1. தூக்கி எறியலாமா?
பொதுவாக நாம் வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அகற்ற வேண்டும். இந்த மாத்திரைகளை வெளியில் தூக்கி வீசாமல் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொடுத்தால் சிறந்தது. அல்லது மருந்துக் கடைகளுக்கு சரிக் கொடுக்கலாம்.
2. கழிவறையில் போட்டு விடலாமா?
சிலர் மருந்து வில்லைகளை இனி தேவையில்லை என்று கழிவறையில் போட்டு தண்ணீர் ஊற்றி விடுவார்கள். ஆனால், எல்லா மாத்திரைகளையும் இதுபோல கழிவறையில் வீச முடியாது. ஏனெனின் கழிவுநீரில் கலந்து மண்ணுடன் சேரும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
3. பிராணிகள் உட்கொண்டால் என்ன நடக்கும்?
இது போன்ற மாத்திரைகளை வெளியில் எறியும் போது அதில் குப்பைகளுடன் கலந்து விடும்.இந்த மாத்திரைகளை நாய், பூனை, மாடு ஆகிய மிருகங்கள் சாப்பிட்டால் அவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குடி நீர் குழாய்களில் கலந்து தண்ணீர் மாசடைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |