கண்ணுல லென்ஸ் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்!
தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு கண்கள் தெரியவில்லையென்றால் அதனை சரியாக்க முற்பட மாட்டார்கள்.
மாறாக முகத்திற்கு எது அழகாக இருக்கின்றதோ அதனை தான் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள் காண்டக்ட் லென்ஸ் அணிந்து கொள்வார்கள்.
ஆனால் இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் காண்டக்ட் லென்ஸ் அணிந்து இறந்து போன பெண்ணின் கதை தான் தொடர்ந்து பார்க்க போகின்றோம்.
காண்டக்ட் லென்ஸால் வந்த வினை
Image - Herzing eye institute
லீசெஸ்டர் நகரில் வசிக்கும் மேரீ மேசன் என்ற பெண் கண்களை சிலபல கோளாறு காரணமாக காண்டக்ட் லென்ஸ் அணிந்து வந்துள்ளார்.
அப்போது திடீரென்று கண்களில் பிரச்சனை ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் பக்கத்திலுள்ள மருத்துவரை சந்தித்துள்ளார்.
கண்களை பரிசோதித்த மருத்துவர், தினமும் குளிக்கும் போது காண்டக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு குளிப்பீர்களா? என வினவியுள்ளார்.
Image - Hansgrohe
இதனை தொடர்ந்து இதனால் அவரின் கண்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என தெளிவாகியுள்ளது.
தொற்றினால் மேரீ அவரின் கண்பார்வையை இழக்கிறார். பல முறை அறுவை சிகிச்சை செய்தும் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லையாம்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காண்டக்ட் லென்ஸ் பாவிப்பவர்களிடையே பிதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இனி குளிக்கும் போது, தூங்கும் போது காண்டக்ட் லென்ஸை அகற்ற வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |