கற்றாழை பல நன்மைகளை தந்தாலும் அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரியுமா?
கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது.
கற்றாழை ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருளாகும். இது பலருக்கும் நன்மை தரும் ஒரு தருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாகும்.
எவ்வளவு தான் ஒரு பொருளில் நன்மை இருந்தாலும் அதிலும் தீமைகள் நிறைந்திருக்கும். அந்த தீமைகள் தான் இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம்.
கற்றாழையின் தீமைகள்
கற்றாழை இலைகளில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இது தாவரத்தின் தோலின் உள்ளே இருந்து இருக்கும். இதன் காரணமாக இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது.
கற்றாழையில் இதுபோன்ற பல பாலிசாக்கரைடுகள் மற்றும் பீனாலிக் இரசாயனங்கள் காணப்படுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, ஹைபோகலீமியா, சிறுநீரக செயலிழப்பு, ஒளி நச்சுத்தன்மை மற்றும் அதிக உணர்திறன் எதிர்வினைகள் போன்றவை காணப்படுகின்றன.
சமீபத்தில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் ஒன்று எலிகள் மீது நடத்திய ஆய்வின்படி, கற்றாழை இலைகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் கற்றாழை வாய்வழியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கருச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
கற்றாழையின் இருக்கும் சில பதார்த்தம் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவற்றை உண்டாக்கும். கற்றாழை சாறு அதிகமாக குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
அதிகப்படியான கற்றாழை உட்கொள்வது உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும், இது மெதுவாக அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் இதனால் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |