எதிர்நீச்சல் சீரியலில் பெரிய பிழையை விட்ட இயக்குனர் - கலாய்க்கும் நெட்டிசன்கள்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இயக்குநர் பெரிய மிஸ்டேக் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கியுள்ளார்.
இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் இரண்டாவது பாகத்தை தொடங்கினர்.
இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்கள் பெரியளவில் மக்களிடையே போகாமல் இருந்தது. ஆனால் தர்ஷன் திருமண எபிசோடில் இருந்து மறுபடியும் விறுவிறுப்பாக பழைய நிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
நாளுக்கு நாள் கதைகளத்தில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துக்கொண்டுக்கும் நேரத்தில் இயக்குநர் பெரிய பிழை ஒன்றை விட்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மிஸ்டேக்
தற்போது ஜனனி கொடுத்த புகாரின் பேரில் ஆதி குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஆனால் அவரோ போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்து வருகிறார்.
ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் பயன்படுத்தும் போன்களை கொற்றவை தலைமையிலான போலீஸ் டீம் டிராக் செய்து வருவது போல் டைரக்டர் காட்டினாலும் அதில் தான் மிகப்பெரிய மிஸ்டேக்கே ஒளிந்திருக்கிறது.

அதாவது ஆதி குணசேகரனுக்கு வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்யும் வேலையை அறிவுக்கரசி செய்து வருகிறார். இது ஜனனிக்கும் தெரியும்.
இப்படி இருக்க அறிவுக்கரசியின் போனை டிராக் செய்தாலே ஆதி குணசேகரன் எங்கு இருக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் திரைக்கதையை கொண்டு செல்கிறார் இயக்குநர்.
இதை தான் இணையவாசிகள் கலாய்த்து தள்ளி நெட்டிசன்களை பகிர்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |