படுத்த படுக்கையாக கிடக்கும் பிரபல இயக்குனரின் மனைவி... சொத்தை விற்று காப்பாற்ற துடிக்கும் கணவன்
பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மனைவி 5 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் நிலைமை குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குனர் விக்ரமன்
புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர் விக்ரமன்.
அத்திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் அதிலும் இவர் எடுக்கும் பல கதைகளை பெண்களை மையப்படுத்தி அல்லது குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கும் கதைகளாகவே இருக்கும்.
இவர் இயக்கத்தில் பூவே உனக்காக, சூர்ய வம்சம், பிரியமான தோழி போன்ற பல திரைப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. இவர் கடைசியாக நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின் இவர் எந்தப் படங்களையும் எடுக்காமல் இருந்தார்.
மனைவியின் நிலைமை
இந்நிலையில் விக்ரமனின் மனைவி குறித்து சமூக வலைத்தளங்களில் பல சோகமான தகவல்கள் பரவி வருகின்றது.
அதாவது, இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா ஜெயப்ரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞர். இவருக்கு நாள் முதுகு வலி ஏற்பட மருத்துவமனையில் சோதனை செய்து சிகிச்சை செய்துக் கொண்ட போது அது தவறாகிப்போயுள்ளது.
இதனால் அவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகி தன்னுடைய வேலைகளைக் கூட செய்துக் கொள்ளமுடியாத அளவிற்கு போயிருக்கிறார்.
அதுமட்டுமில்லாது இவரின் மனைவி கிட்னி பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். விக்ரமன் தற்போது தனது மனைவியை கவனித்து வருகிறார். படங்கள் இயக்காத காரணத்தால் செலவுகளுக்கு பணமும் குறைந்துள்ளது. இதனால் தன் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று மனைவியை கவனித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |